வளர்ப்பாளர்களின் அசமந்த போக்கினால் பலியான சீவன்கள்

மட்டக்களப்பு ,ஆரையம்பதி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை கனரக வாகனம் மோதி மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளன.

அண்மைக்காலமாக ஆரையம்பதி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகள் அதிகரித்துள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளபோதிலும் அவர்கள் கால்நடைகளை முறையாக பராரிக்காத காரணத்தினாலேயே இவ்வாறான விபத்துகள் நடைபெறுவதாக மண்முனைப்பற்று பிரதேசசபையின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.