கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு சொக்கைப்பாணை எரிக்கும் நிகழ்வு

(லியோன்)

கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள  இந்து மக்கள்  ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடுகளை ஈடுபட்டனர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் வீடுகளில் (3) ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிளக்குகள் ஏற்றப்பட்டு பூஜை வழிபாடுகள்  நடைபெற்றன.

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அடியார்களினால் திருக்கார்த்திகை விளக்கேற்றப்பட்டு தொடர்ந்து ஆலயத்தில் விசேட  அபிசேகம் தீபாராதனைகள் மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து  சுவாமி உள்வீதியுலாவந்து  ஆலய முன்றிலில் சொக்கைப்பாணை எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது  .

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  சௌந்தராஜன்  குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில்  பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வானது இந்துக்களின் பாரம்பரிய சமய கலாசாரம் பொருந்திய நிகழ்வாக ஆண்டு தோறும் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது