உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பாளர் தெரிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் செய்தது?

மக்களுக்கா? கட்சிக்கா? தலைமைக்கா? யாருக்கு வேட்பாளர்? யாரை கேட்டு முடிவு செய்தார்கள்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் யார்? அவர்களை எங்கு வைத்து யாரை கேட்டு தெரிவு செய்தார்கள் என கட்சி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த அடிப்படையில் தெரிவு செய்துள்ளது என தங்களுக்கு தெரியாது எனவும் தாங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட இது குறித்து முடிவு எடுக்கப்பட வில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஐயன்கேணியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கூறுகையில். நாங்கள் புத்தி தெரிந்த காலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து வருகின்றோம். எமது கிராமத்தில்  2500 இற்கு மேற்பட்ட வாக்குகள் உண்டு எமது வட்டாரம் செங்கலடி-01, ஐயன்கேணி , தளவாய் கிராமங்களை உள்ளடக்கிய வட்டாரம் இதில் எமது கிராமத்தின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும். ஆனால் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யாரும் எம்முடன் தொடர்வு கொள்ளவும் இல்லை எமக்கான வேட்பாளர் யார்? என்று சொல்லவும் இல்லை. 

ஆனால் மக்கள் தினந்தொரும் என்னை தொல்லைப்படுத்துகின்றனர் யார் வேட்பாளர்? நாம் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது ? என்னிடம் அதற்கான பதிலும் இல்லை இதுவரை காலமும் எம்மிடம் வாக்குப் பெற்றுச்சென்ற எந்த அரசியல் வாதியும் எம்முடன் தொடர்வு கொள்ளவும் இல்லை எனவே நாளை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி நாங்களாக ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கப் போகின்றோம் அது நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்காது என்றார்.



இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் யார்?  அவர்கள் மக்களின் விருப்பத்தின் பிரகாரம் ததேர்ந் தெடுக்கப்பட்டார்களா? அல்லது கட்சி தலைமைகளின் விருப்பத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்களா? அல்லது கட்சி தலைமைகளுக்கு சேவைசெய்யு நபர்களா? என்பது தெரியாத நிலையில் கிராமப்புற மக்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதில் என்ன? உங்களுடைய வேட்பாளர் தெரிவு ஐனநாயக விரோதச் செயற்பாடா? என்பதை தெளிவுபடுத்துமாறு ஊர் தலைவர்கள் கேட்கிறார்கள்.