16நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான தடுக்கும் நோக்கிலும் பால் நிலை சமத்துவத்தினை நோக்காக கொண்டும் வருடாந்தம் அமுல்படுத்தப்பட்டுவரும் பாலநிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.புகாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள உதவி பணிப்பாளர் கே.சுசீலன்,மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகதாசன்,மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் மகளிர் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவர்கள் மீதான வன்முறைகளும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்கு அவர்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான முக்கியத்துவம் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரெட்னராஜா உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.