காத்தான்குடியில் மூன்று மாடி கட்டிடம் ஆளுநரினால் திறந்து வைப்பு .

(லியோன்)

மட்டக்களப்பு காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலயத்தில் நீர்மானிக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடம் கிழக்குமாகாண ஆளுநரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது  .


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலயத்தில் ஐக்கிய அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை பீடத்தின் நிதி அனுசரணையில் நீர்மானிக்கப்பட்டுள்ள மூன்று மாடி வகுப்பறை கட்டிடமும் சமையலறை கட்டிட  தொகுதியும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவினால் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது .

பாடசாலை அதிபர் எச் என் .மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம, ஐக்கிய அமெரிக்க நாட்டின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உயர்தானிகர் ரொபட் இல்டன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தனர்

இந்த கட்டிட திறப்புவிழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா , முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் சிப்லி பாருக் , கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம் டி எ . நிஷாம்  மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை  ஆசிரியர்கள் , மாணவர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்


ந்நிகழ்வில் உரையாற்றிய போது கிழக்குமாகாண கல்வி பணிப்பாளர் எம் டி எ . நிஷாம் தெரிவிக்கையில் இந்த மூன்று மாடி கட்டிடமானது இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது ,ஒன்று மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் , இரண்டு இப்பகுதியில் இயற்கை அனர்த்தங்க ஏற்படும் போது மக்கள் அச்சம் இன்றி  பாதுகாப்பாக  தங்குவதற்காக சகல அடிப்படை வசதிகளை கொண்ட கட்டிடமாக  நிர்மானிக்கப்பட்டுள்ளது , இந்த கட்டிடமானது ஐக்கிய அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை பீடத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்