தமிழ் மொழி பயிற்சிக் கல்லூரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்

(லியோன்)

பதுளை மாவட்ட மையங்கனை தமிழ் மொழி  டிப்ளோமா பயிற்சிக் கல்லூரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குவிஜயத்தை மேற்கொண்டுள்ளனர்  


கட்டான பொலிஸ் சேவைக்கால மற்றும் தமிழ் மொழி பாட  நெறிக்கான பணிப்பாளர் எஸ் எஸ் பி . செல்வராஜா வழிகாட்டலின் கீழ் மையங்கனை மற்றும் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ் மொழி  டிப்ளோமா பயிற்சிக் கல்லூரியின் இணைப்பாளர் ஐ பி . பேரின்பராஜா தலைமையில்  மையங்கனை தமிழ்மொழி டிப்ளோமா  கற்கை நெறியினை கற்கும்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலாசார சுற்றுலா ஒன்றை  மட்டக்களப்பு மாவட்டத்தில்  மேற்கொண்டுள்ளனர் .

மட்டக்களப்பு தமிழர்களின் கலை , கலாசாரம் , பண்பாடு போன்ற விடயங்களை கற்றுக்கொள்ளும் நோக்கில் வருகைதந்துள்ளனர் .

இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ  மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு , ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகள் , தமிழர்களின் திருமண கலாசார வைபவம்  போன்ற மட்டக்களப்பு கலாசார விடயங்களை  கற்றுக்கொண்டுள்ளனர் .


இந்த கலாசார சுற்றுலா விஜயத்தில் தமிழ் மொழி பாடநெறி ஆசிரியர்கள் 20 பேரும் , தமிழ் மொழி  பயிற்சிக் கல்லூரி  பொலிஸ் உத்தியோகத்தர்கள் 427 பேரும்  கலந்துகொண்டனர்