மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய ஒளிவிழா நிகழ்வுகள்

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில்
  கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விசேட  ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு  அதிபர்  வி . முருகதாஸ் தலைமையில்  சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள்  பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து  பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன.

இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றளுடன்  மாணவர்களின் ஒளிவிழா  நிகழ்வினை சிறப்பிக்கும்  வகையில் மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது ,


இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மரியாள் பேராலய உதவி பங்குதந்தை ஜோசப் நிகஸ்டன், அமிர்தகழி மெதடிஸ்த ஆலய அருட்சகோதரி கிரேஸ் ரொபின் , ஆசிரியர் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் கிருஷ்ணபிள்ளை  மற்றும்   பாடசாலை  ஆசிரியர்கள் , மாணவர்கள் ,  பாடசாலை  பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .