மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

உலக பாரிசவாதம் நோய் தின நிகழ்வு

.(லியோன்)  

உலக பாரிசவாதம் நோய்  தின நிகழ்வும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாரிசவாதம்  நோய்க்கான சிகிட்சைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியினை சிறப்பிக்கும் நிகழ்வும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் (01) நடைபெற்றது . 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் , வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் ,தாதிய உத்தியோகாத்தர்கள் என பலர் கலந்துகொண்டார்..

இதன்போது வைத்திய நிபுணர்களினால் உருவாக்கப்பட்ட பாரிசவாதம்   
நோய்  தொடர்பான குறுந்திரைப்படமும்  காட்சிப்படுத்தப்பட்டது .

இந்நிகழ்வில் கலந்துகொண்ட  வைத்திய நிபுணர்கள் உரையாற்றுகையில் இலங்கையில் அதிகளவு உயிரிழப்பினை ஏற்படுத்தும் தொற்றா நோயாக பாரிசவாதம் இருந்து வருவதாகவும் அது தொடர்பில் போதிய அறிவு அற்றவர்களாக மக்கள் இருந்து வருகின்றனர்
பாரிவாத நோயினால் ஒருவர் பாதிக்கப்படும்போது அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்  .பாரிசவாத நோயினால் பாதிக்கப்படும் ஒருவரை நான்கரை மணித்தியாலத்திற்குள் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது அந்த நோயினை குணப்படுத்தமுடியும். என  தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாரிசவாதம் நோய்க்கான சிகிட்சை முறை  2016  நவம்பர் ஆரம்பிக்கப்பட்டு  2017 நவம்பர்  மாதத்துடன் ஒரு வருடம் நிறைவு பெறுகின்றது .
இந்த ஒருவருட காலப்பகுதியில் 80  நோயாளிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதில் 23 பேருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ள நிலையில் 53 நோயாளிகள் சிகிட்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்