மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இரத்தினசிங்கம் லலீந்திரன் நியமனம்

(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த இரத்தினசிங்கம் லலீந்திரன் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றார் .
இது தொடர்பாக இவர் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் .

இவருக்கு  கிடைத்துள்ள இந்த நியமனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார் .  

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக  மாவட்டத்திற்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இதன் ஊடாக மாட்டத்தின் இளைஞர் யுவதிகளின்  தொழில் வாய்ப்பு , உட்கட்டமைப்பு , யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினைகள் , காணி பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த இரத்தினசிங்கம் லலீந்திரன் தெரிவித்தார் .