தாழங்குடாவில் இருந்த படைமுகாம் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியார் காணியொன்றில் படைமுகாம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் நல்லாட்சியின் கீழ் தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த காணி விடுவிக்கப்பட்டது.

இதன்கீழ் கடந்த 10வருடத்திற்கு மேலாக தாழங்குடாவில் தனியார் காணியில் இருந்த படைமுகாம் அகற்றப்பட்டு அந்த காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.