மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கான ஆய்வு அறிக்கை

(லியோன்)

மட்டக்களப்பு  பொலிஸ் நிலையத்திற்கான  ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின்  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும்  பொலிஸ் நிலை  போக்குவரத்து வாகனங்களுக்கான ஆறுமாத கால  ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்  மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு ,சீருடை பரிசோதனைகள்  மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்     சமன் யடவர   வழிகாட்டலுக்கு அமைய மட்டக்களப்பு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற தலைமையில்   நடைபெற்றது  .


நடைபெற்ற  மட்டக்களப்பு பொலிஸ்  நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில்  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டதுடன் ,பொலிஸ் நிலையத்திற்கான அனைத்து  போக்குவரத்து  வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன