மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் காலத்தில் மிகச் சிறந்த பயிற்றுவிப்பாளர்களும் நடுவர்களும் வளர்ச்சி பெறுவார்கள்.

(சசி துறையூர் )மது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள்  நீங்கள் அனைத்து வகையான விளையாட்டுக்களுக்கும் மிகச் சிறந்த  பயிற்றுவிப்பாளர்களாகவும் நடுவர்களாகவும் வளர்ச்சி பெறுவீர்கள், வளர்சியடையவும் வேண்டும்.  உங்களில் சிறப்பான ஆற்றலோடும் ஆர்வத்தோடும் பலர் உள்ளனர் என விளையாட்டு உத்தியோகஷ்தர்  ரி.பிரசாத் உரை.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்
மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் (02.11.2017- 04,11,2017) சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் சத்துறுக்கொண்டான் சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் இளம் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.

இந்த பயிற்சி செயலமர்வில் பயிற்றுவிப்பாளராக இளைஞர் யுவகளுக்கு பயிற்சிகளை வழங்கி இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகஷ்தர்  ரி.பிரசாத் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த இளம் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி செயலமர்வில் எல்லே, கபடி, வலைப்பந்து, கூடைப்பந்து, கயிறுழுத்தல், கரப்பந்து போன்ற விளையாட்டுக்கள் தொடர்பாகவும் மெய்வல்லுணர் விளையாட்டுக்கள் தொடர்பாகவும் செயன் முறையோடு கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

 Dr.s. விவேகானந்தன், திரு.கே ரவீந்திரன், Mr.M.Y. ஆதாம்லெப்பை,
Mr.K. நிலக்சன், திருமதி எஸ்.கஜேந்தினி ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக பயிற்சிகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட முப்பத்தைந்து இளைஞர் யுவதிகள் இந்த பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டனர்.