சமூக தொடர்பாடல் நிலையத்தின் 51வது உலகத் தொடர்பாடல் தின விழா

( லியோன்)

மட்டக்காப்பு மறை மாவட்ட சமூக தொடர்பாடல் நிலையம் நடாத்தும் 51வது உலகத் தொடர்பாடல் தின விழா (04) மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில்  நடைபெற்றது .


சமூக தொடர்பாடல் நிலைய இயக்குனர் அருட்தந்தை பி . ரமேஷ் கிறிஸ்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை  விருந்துனராக மட்டகளப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டார் .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மலர் மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .

நிகழ்வில் புனித ஜோசெப் வாஸ் அடிகளாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான குறுந்திரை காண்பிக்கப்பட்டதுடன் அவர் தொடர்பான பாடல்கள் , நாடகங்கள் இடம்பெற்றதுடன் , கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியக் கற்கைகள் நிறுவகம் வழங்கிய “ இலங்கைத் திருச்சபையின் காவலன் “  எனும்  நாட்டிய நாடாம் இடம்பெற்றது .

மட்டக்காப்பு மறை மாவட்ட சமூக தொடர்பாடல் நிலையத்தினால் 51வது உலகத் தொடர்பாடல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று முதல் இடங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது . 

இதேவேளை கல்வி , சமூக ,சமயப்பணிகளில் தண்ணிய ஈடுபடுத்தி ஆன்மீக பணியில் ஈடுபட்டுள்ள அருட்தந்தை டொமொனிக் சாமிநாதன் ,மற்றும் கலை ,எழுத்து ,,சாரணியம் ,சமூக பணியில் ஈடுபட்டுள்ள கலைக்கோட்டன் அ இருதயநாதன்  ஆகியோரோக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , மாணவர்கள் , பெற்றோர்கள் ,பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர் .