புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு

(லியோன்)

புதிய ஆணையாளரை  வரவேற்கும் நிகழ்வும் , ஆணையாளரின்  கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது .

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளாராக கடமையாற்றிய  என்  மணிவண்ணன் தற்போது இடம்மாற்றம் பெற்று மட்டக்களlப்பு மாநகர சபைக்கு  ஆணையாளராக வருகை தந்துள்ளார் .

இவர் தனது கடமைகளை உத்தியோக  பூர்வமாக பொறுப்புக்களை நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது .


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் , மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்