மண்டூர் பொதுநூலகத்தில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா.

(மண்டூர் நிருபர்) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  மண்டூர் பொது நூலக வாசகர் வட்டத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வுகள் இன்று(07) மண்டூர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகள் உரை, வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள்,சிறந்த வாசகருக்கான விருது மற்றும் சில கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறந்த வாசகராக விக்டர் செல்வநாயகம் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு போ.பி.சபை சனமூக நிலைய உத்தியோகத்தர் ம.கருணாநிதி, போ.பி.சபை மண்டூர் உப அலுவலக பொறுப்பாளர் பா.சதீஸ்கரன்,நூலகர்கள்,வாசகர் வட்ட தலைவர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Add caption