சிறந்த சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

 சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வுகளும்  அவர்களது உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான  வேலைத்திட்டங்களும்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . 


இதற்கு அமைய சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் மற்றும் கிழக்குமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து “ முதுமைக்குள் புதுமை காண்போம் “ எனும் தொனிப்பொருளில்  சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி  தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில்  நடைபெற்றது .

இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளின் கலை நிகழ்வுகளும் , அவர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது


இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக   தேசிய  முதியோர் சம்மேளன தலைவர் க .நடேசன் , மாவட்ட முதியோர் சம்மேளன தலைவர் கி . சிவபாலன் , மாவட்ட முதியோர் சம்மேளன பொருளாளர் ஞா . பேரின்பம் ,மாவட்ட முதியோர் சம்மேளன உப தலைவர் எம் எம் .சாந்தி முகைதீன் ,சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகான சமூக சேவைகள் திணைக்கள மாகான பணிப்பாளர் எம் சி .அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர் .

நடைபெற்ற மாவட்ட முதியோர் தின நிகழ்வில் மாவட்ட முதியோர் சங்க உறுப்பினர்கள் , பிரதேச  செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   உட்பட பலர் கலந்துகொண்டனர்