நீங்கள் அரவணைத்தால் நாங்களும் சாதிப்போம்

 (லியோன்)

“ நீங்கள் அரவணைத்தால் நாங்களும் சாதிப்போம் “ எனும் தொனிப்பொருளில் ஒசானம் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் இல்லத்தின்  கைவினைப்பொருட்களின்  கண்காட்சியும் விற்பனையும் எதிர் வரும் 11 ஆம்  12 ஆம் திகதிகளில் சத்துருக்கொண்டான் ஒசானம் இல்லத்தில் இடம்பெறவுள்ளது


ஓசானம் இல்ல மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில்  தேவையான நிதியினை திரட்டுவதற்கான ஓசானம் இல்ல மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள், இல்ல  பணியாளர்களின்  கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளதாக இல்ல மேளாளர் அருட்சகோதரி தெரிவிக்கின்றார் .


ஒசானம் இல்ல மேளாளர் அருட்சகோதரி தலைமையில்  இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியும் விற்பனையுமானது காலை 09.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்