அனுராதபுரம் சிறைக் கைதிகள் மூவரின் போராட்டத்திற்கு உ.த.மா.ஒன்றியம் ஆதரவு.உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆ.யோன்சன்
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெருவித்ததுடன்

நல்லாட்சி அரசாங்கம் எந்த வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக மூன்று அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்.இல்லாவிட்டால் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினராக நாம் வடகிழக்குப் பகுதிகளில் அனைத்து மாணவர்கள்,இளைஞர்கள்,யுவதிகள்,என அனைத்து பொது அமைப்புக்களையும் ஒன்று திரட்டி பாரியதொரு மக்கள் போராட்டமாக குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நடாத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.