புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)


 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மாணவர்களில்  2017  ஆம் ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும்  கௌரவித்து அவர்களுக்கான    பரிசில்களும் ,சான்றிதழ்களும்  வழங்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எ .ராசு தலைமையில்  பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது .


பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள் பங்களிப்புடன் கே .ஒ .வி  அமைப்பு  மற்றும் கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்கம் அனுசரணையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் விருந்தினர்களாக  மட்டக்களப்பு  கல்வி வலய திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ் எம் . ஐதரலி  கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டகல்விப் பணிப்பாளர்  கே .அருள்பிரகாசம் , ஒய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ. சுகுமாரன் ,கதிர்காமத்தம்பி உடையார் நன்பிக்கை நிதியம்  தலைவர் என் . கனேஷானாந்தம் , கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்  எ .தேவதாஸ் ,கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தலைவர் வி .ஜனமோகன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசில்களையும் , சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர் .

இந்நிகழ்வில்  ஒய்வு பெற்று சென்றுள்ள மண்முன வடக்கு கோட்டக்கல்விப்  பணிப்பாளர் எ சுகுமாரன் கௌரவித்து நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் , பாடசாலை அவிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .