மட்டக்களப்பில் விபத்து நான்கு பேர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ணமிசனுக்கு முன்பாகவுள்ள சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக முச்சக்கர வண்டி சாரதியும் மோட்டார் சைக்கிள் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோன்று செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் குறுக்காக சென்ற மாடு ஒன்றுடன் மோதியதன் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

வீதிகளில் திரியும்  கட்டாக்காலி  மாடுகளினால் அண்மைக்காலமாக பல்வேறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள்தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறுகோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.