மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் நினைவு தின கூட்டத்தில் குழப்பம்

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தராஜாவின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு தமிழரசுக்கட்சியினால் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களுக்கு எதிரான கோசங்களை விடுத்ததால் அங்கு பரபரப்பு நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விசேட பேச்சாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.கே.சுமந்திரன் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது இவ்வளவு காலத்திற்கு பின்னர் இப்போதுதானா கண் தெரிந்தது என்றும் தங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலத்தில் புறக்கணித்ததாகவும் இப்பகுதிக்கு இனிவரக்கூடாது எனவும் ஆத்திரம்பொங்க தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் குறித்த இளைஞர்கள் அங்கிருந்து அகற்றியதன் பின்னர் நிகழ்வு நடைபெற்றது.