மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை கொடுவாமடு சந்தியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான லொறியொன்று வீதியில் நின்றவரை மோதி சென்று விபத்துக்குள்ளானது.

இதன்போது வீதியில் நன்றி ஒருவரும் லொறியில் பயணித்த மூவருமாக நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்தவர்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.