சிவஸ்ரீ ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேக கௌரவிப்பு நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய இந்து மத குருவும் மாவட்ட செயலக சித்தி விநாயகர் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ  உ. ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேக குரு பட்டமளிப்பு நிகழ்வு யாழ் உரும்பிராய் சிவஞான பாஸ்கரன் பிரம்ம ஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  9ஆம் திகதி நடைபெற்றது


 யாழ் உரும்பிராயிலுள்ள சிவதர்மாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் சமய தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சாரியா அபிசேகம் நடைபெற்று சிவாச்சாரியராக பட்டம் பெற்ற குருக்களை கௌரவித்து   வரவேற்கும் நிகழ்வு இன்று மாலை  மட்டக்களப்பு கள்ளியன்காடு ஆஞ்சனேயர் ஆலயத்தில்  நடைபெற்றது .


சிவாச்சாரியராக  அபிசேகம்  செய்யப்பட குருக்களை வரவேற்கும் விசேட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றிய சமய தலைவர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அவருக்கான கௌரவத்தினை வழங்கியதோடு , ,வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்கொண்டனர்


இவர்  மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம், கூழாவடி கிராம அபிவிருத்திச் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஆகியவற்றிலும் இணைந்து செயல்படுவதோடு , மாவட்ட செயலக சித்தி விநாயகர் ஆலயம்,  கள்ளியன்காடு ஆஞ்சனேயர் ஆலயம்,  அமிர்தகழி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,  வலையிறவு மாணிக்க விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் பிரதமகுருவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது