News Update :
Home » » கிழக்கிலங்கை இந்து எழுச்சி விழா 2017

கிழக்கிலங்கை இந்து எழுச்சி விழா 2017

Penulis : No Name on Monday, November 13, 2017 | 6:37 AM

இருமருங்கும் குளங்கள் எங்குசென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்துபோகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வு,நல்லமனிதர்கள் வாழ்ந்து நாட்டுக்கு தொண்டு செய்த வெல்லாவெளியில் இனிதே எழுச்சியுடன் நடந்தேறியது.

கிழக்கில் தொன்று தொட்டு இந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உலகறியச் செய்வதனையும்;, எமது கலாசார விழுமியங்கள்,கலை, பாரம்பரியங்களை, உலகறியச் செய்வதனையும் நோக்கமாகக் கொண்டு, உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் போராதீவுப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் ஒழுங்கு படுத்தலில் நிக் அன்ட் நெல்லி ஸ்த்தாபனத்தாரின் அனுசரணையில் கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையினால் 'கிழக்க்pன் இந்து எழுச்சிவிழா 2017'கார்த்திகை 12ம் திகதிவெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலயங்களின் பிரதமகுருமார்கள்,கல்விப்புலத்து புத்திஜீவிகள்,அரசதிணைக்கள அதிகாரிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,சமயமற்றும் சமுகத் தலைவர்கள், இளைஞர்கள்,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இந் நிகழ்வில் கலந்து இந் நிகழ்வை எழுச்சியுறவைத்தi மகிழக்கில் ஒருவரலாற்று பதிவாகப் பார்க்கப்படுகின்றது.

இங்கு இந்துக் கலையூடாக எமது பாரம்பரியம், நம்பிக்கை, வாழ்க்கைமுறை, வழிபாட்டு முறை என்பனவற்றினை பரதம், காவடி, செம்புநடனம், கரகம், கூத்து என கிராமத்து கலைகளுக்கு மூச்சுக்கொடுத்த எழுச்சிவிழாவாகவும், இந்தமாணவர்கள், இளைஞர்களின் மண்டிக்கிடந்ததிறமைகளைமன்றத்தில் ஏற்றிய உற்சாக எழுச்சி விழாவாகவும் இதனைப் பார்கலாம். இந்தநிகழ்வுகள் பலவற்றை போராதீவுப் பற்று கலாசார மத்திய நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

'இந்து, இந்துவேதம், இந்து இலக்கியம் மற்றும் பண்பாடு,இந்துவாழ்க்கைமுறை,தமிழ் மொழி, என்பவையெல்லாம்..... மாற்று மதத்தினராலும், மாற்று இனத்தினராலும், வேற்றுநாட்டவரினாலும் பல்வேறுவகையாகத் தாக்கி! தகர்த்துத் தகர்த்து, கணிசமான அளவு தவிடுபொடியாக்கிவிட்டு,தரையோடுதரமட்டமாக்கிக் கொண்டு இன்னும் சிறிதுகாலத்தில் இருந்த இடமே இல்லாமல் போய்விடும் என்றநிலைவளர்ந்து,வளர்த்து,வளக்கப்பட்டு,வளப்பட்டு,வலிமைப்பட்டுஅடக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலே இந்தநிகழ்வுபற்றியஎண்ணம் எம்மிடையேஊற்றுப்பெற்றது.'என இச்சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தனதுதலைமையுரையில் குறிப்பிட்டார்.

எமதுபிரதேசத்தின் பெரும்பாலானசமுதாயவாதிகளும்,அரசியல்வாதிகளும் பல்வேறுவகையானகாரணகாரியங்களால் இந்துதர்மத்தினை, நம்பிக்கையினைமதிக்கமுடியாதவர்களாக,போற்றிபேணிப்பாதுகாக்கமுடியாதவர்களாகமாறியுள்ளகாரணத்தினால் இந்துக்களின் உரிமைகளும்,பெருமைகளும்,ஒப்புயர்வற்றதனித்தன்மைகளும், ஏனைய இனத்தினரால் சிதைக்கப்பட்டுசிதையவும்,சிறுமைப்படுத்தப்பட்டுசிறுமையுறவும்,கொடுமைப்படுத்தப்பட்டுநலிந்துமெலியவும் நேரிட்டுள்ளது!.
இவற்றில் இருந்துஎழுச்சிபெறவே இந்தநிகழ்வுகாலத்தின், இனத்தின் தேவைகருதிஒழுங்குசெய்யப்பட்டதுஎன்றசெய்தி இங்குஅனைவரினாலும் அறைகூவப்பட்டது. இவற்றால் இனிமேல் நாத்திகரும்,பகுத்தறிவாதிகளும்,சீர்திருத்தவாதிகளும்,கண்மூடித்தனமாகவும்,காட்டுமிராண்டித்தனமாகவும்,தமிழ் இந்துமதத்தினையும், இந்துக்களின் வாழ்வியலையும், இழித்தும் பழித்தும், நகைத்தும், பகைத்தும்,கிண்டல் செய்தும் கேலிபேசியும்,பேசித்திரிவது, தடுக்கப்பட்டுவிட்டது எனநம்பிக்கை கொள்ளலாம்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் துறைத்தலைவருமான சோ.ஜெகநாதன், கோட்டைக்கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றபு. பாலச்சந்திரன், தேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரஅமைச்சின் மனிதவள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன்,அத்துடன் முன்னால் மாகாணசபைஉறுப்பினர்,நா.கிருஷ்ணபிள்ளைஆகியோர் அதிதிகளாககலந்துசிறப்பித்தமைகுறிப்பிடத்தக்கது.

இங்குநிகழ்வுகளாக இச்சபையினரால் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காகநடாத்தப்பட்ட இலவசகல்விக் கருத்தரங்கில் சித்திபெற்றமாணவர்கள், அவர்களுக்கானஅதிபர் ஆசிரியவர்கள், வளவாளர்கள், பெற்றோர்கள் பாராட்டிவைக்கப்பட்டனர். அதுபோல் 15 அறநெறிப்பாடசாலைகளை தேர்ந்துஅவர்களுக்கானபண்ணிசைப் போட்டிவைக்கப்பட்டுஅதில் கலந்துகொண்டுவெற்றியீட்டியவர்களுக்குபாராட்டிபரிசுவளங்கும் நிகழவும் நடைபெற்றது.

அத்துடன் பு.பாலச்சந்திரன் உதவிக்கல்விப் பணிப்பாளர் அவரதுசேவையைமெச்சிபொன்னாடைபோற்றிகௌரவிக்கப்பட்டமையும் அங்குமுக்கியமாக இடம்பெற்றதுடன். புலஎழுச்சிபெறும் கலைநிகழ்ச்சிகளைஉள்ளகஅலுவல்கள்,வடமேல் அபிவிருத்திமற்றும் கலாசாரஅலுவல்கள் அமைச்சின் போராதீவுப்பற்றுகலாசாரமத்தியநிலையத்தின் ஒழுங்குபடுத்தலில்மற்றும் தயாரிப்பில் பலகலைதரம்வாய்ந்தகலைநிகழ்வுகளைஅரங்கேற்றிஎமதுபண்பாட்டைபறைசாற்றியமைஎல்லோரையும் உணர்ச்சிவசப்படுத்தியதுஎழுச்சிபெறவைத்தது.
இதற்குமேலாகஅதிதிகள் உரையில் எழுச்சிதொனிக்கும் வகையில் 'நாமார்க்கும் குடியல்லோம் நரகத்தில் இடர்படோம் நமனைஅஞ்சோம்'எனஅப்பர் கூற்றைஅடியொற்றிநாங்கள் நரகத்தில் இடர்பட்டதுபோதும்,அதில் இருந்துஎழுச்சிப் பெறும் சரியானதருணம் இது என்றுதொடங்கியஉதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் அவர்கள்  மேலும்,'இங்கு இந்துமதம்(நம்பிக்கை) தான் உலகம் பூராகவும் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுக்குமுன்னமே இருந்திருக்கிறதுஎன்பதற்கானசான்றாதாரங்கள் உண்டு. எமதுமதம் சனாதனதர்மம் எனஅழைக்கப்படுகின்றதுஏனெனில் அதுஆதியும் அந்தமும் இல்லாதஒன்று. அதற்குபெயர்கூட இருக்கவில்லைஆனால் பின்னாளில் திரிபுபெற்றுபலமதங்கள் தோற்றம் பெற்றதன் பின்னர்தான் அவற்றில் இருந்துவேறுபடுத்திக் காட்ட இந்துக்கள் எனஅழைக்கலாயினர்.'எனவும் மேலும்,
இந்தமதம் தன் உலகம் பூராகவும் பரவி இருந்திருக்கிறதுஅதெப்படிஅதற்குதான் நாகர் சுவாமிகள் கல்வெட்டுசரித்திரசான்றுகள் எல்லாம் சொல்லி இருக்கிறார்.எகிப்தில் ஒருஒப்பந்தத்தில் மித்திரவர்ணசாட்சியாகஎனஅந்தமன்னன் கையொப்பம் இட்டுள்ளதுகி.மு 1300க்கு முன் உள்ளஆதாரம் ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மெச்சிக்கோவில் இன்றும் நவராத்திரிவிழாகொண்டாடப்படுகின்றது. அவுஸ்த்திரேலியபழங்குடியினர் இன்றும் சிவாடான்ஸ் எனஒருநிகழ்வைநிகழ்த்திவருகின்றனர். இப்படிதொலைத் தொடர்பு,போக்குவரத்துவளராதகாலத்திலேயே இந்துமதம் அங்கெல்லாம் இருந்திருக்கிறது. இந்தவம்சத்தின் சொந்தக்காரர்கள் நாங்கள். அதைநினைத்துபெருமைகொள்ளவேண்டும்'. எமது இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும்,ஒருத்தருக்குஒருத்தர் ஒத்தாசையாக இருக்கவேண்டும்,சுயநலமற்றபொதுத்தொண்டில் இளைஞர்கள் அதிகஅதிகம் ஈடுபட்டுஎமதுபண்பாட்டை இயன்றவரைகட்டிக்காக்கவேண்டும்'எனஉருக்கானஒருஎழுச்சியுரையைஉதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் நிகழ்த்தினார்.

'எமது இந்துக் கலாசாரம் ஆலயங்களில்,பாடசாலைகளில் மற்றும் குடும்பங்களில் இருந்துஆரம்பிக்கப்படவேண்டும். அத்துடன் ஏனைய மதத்தில் தங்களுடையநடவடிக்கைகளைசெம்மைப்படுத்தகட்டுப்படுத்தபொதுச்சபைகள் இருப்பதுபோல் எமதுமதத்தில் இல்லை,அவ்வாறானஒருஉறுதிவாய்ந்தஅமைப்பினைகட்டியெழுப்பவேண்டும்.'எனசிரேஸ்ட்டவிரிவுரையாளர் சோ.ஜெகநாதன் குறிப்பிட்டார்.

'நாம் பண்பாட்டின் தாயும் தகப்பனுமாக இருக்கின்றஎமதுமொழி,நம்பிக்கைஎன்பனபலரைகவர்ந்துஅவர்கள்பின்பற்றுகின்றவேளைநாம் அவற்றைமறந்துவருகின்றோம்;. ஓற்றுமைகுலைந்துள்ளது. பாரம்பரியம் குலைந்துவருகின்றது. ஆனால் அதைதூக்கிநிறுத்தும் இந்தசபையினரின் செயற்பாடுபெரியஆறுதலைதந்துள்ளது. இவர்கள் சமயத்தோடுகல்வியை,சமயத்தோடுவாழ்வாதாரத்தை,கலையை,ஒற்றுமையைபலகோணத்தில் கட்டியெழுப்பிவருவதுபெருமைப்படுத்தNவுண்டியது.'ஏனபு.பாலச்சந்திரன் ஓய்வுபெற்றகோட்டைக்கல்விஅதிகாரிகுறிப்பிட்டார்.
ஆக குறைகளைச் சுட்டிக்காட்டிநிறைவடையச் செய்யும் செயற்பாட்டாளர்களைதுறைசார் தேர்ச்சிபெற்றவர்கள் மூலம் எதிர்காலவளர்ச்சிக்காகஅறைகூவியஎழுச்சி,உலகத்தவரேபோற்றும் எமது இந்துதமிழ் பண்பாட்டைபடடிதொட்டிஎங்கும் தூசிதட்டியஎழுச்சி,அருகிப் போகும் அருமருந்தபண்பாட்டைமீட்டெடுப்பதற்கானஎழுச்சியாக இந்தஒட்டுமொத்தநிகழ்வுஅமைந்திருந்ததுமகிழ்ச்சியைத் தருகின்றது. 
'எழுமின் விழிமின் குறிசாரும் வரைநில்லாதுசெல்மின்'சுவாமி விவேகானந்தர்.
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger