மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச இலக்கிய விழா

 (லியோன்)

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபை மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும்  2017  பிரதேச  இலக்கிய விழாவும் “, புதிய மழை “  சிறப்பு மலர் வெளியீடும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது ..


இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன்  தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  நடைபெற்றது .

இந்நிகழ்வில் நர்த்தன பவனம் நாட்டியாலய மாணவர்களின் நாட்டியமும் ,கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கலாசார இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற  மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது . 

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக தத்துவக் கவிஞர் தேனகச் சுடர் கலா பூஷணம் பொன்னுசாமி தவநாயகம் , சிறப்பு அதிதிகளாக   மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் . மணிவண்ணன் , , தலைக்கோல் எம் .கே . கணபதிபிள்ளை , கிழக்கு மாகான நிர்மாணிப்பு அபிவிருத்தி ஒன்றிய தலைவர் வி ரஞ்சிதமூர்த்தி  ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர் .