முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜனாவின் சகோதரர் இலண்டனில் மரணம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் (ஜனா)சகோதரர் இலண்டனில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கோவிந்தன் கருணாகரமின் சகோதரரான கோவிந்தன் கருணாநிதி (52வயது)இலண்டனில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.