களுவன்கேணியில் தமது பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய தந்தை கைது

மட்டக்களப்பு ஏறா{ர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி,பலாச்சோலை கிராமத்தில் தமது இரண்டு பிள்ளைகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையொருவரை ஏறா{ர் பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

களுவன்கேணி,பலாச்சோலை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே தமது இரண்டு பிள்ளைகளையும் துஸ்பிரயோகப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் இருந்த 13வயது சிறுவனும் 10வயது சிறுமியுமே இவ்வாறு துஸ்பிரயோகம் மற்றும் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிள்ளைகளின் தாய் ஒருவாரத்திற்கு முன்பாகவே தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற நிலையில் தந்தையின் அரவணைப்பிலேயே பிள்ளைகள் இருந்ததாகவும் ஏறா{ர் பொலிஸார் தெரிவித்தனர்.

22ஆம் திகதி தொடக்கம் இரண்டு பிள்ளைகளும் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தந்தையார் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஏறா{ர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் ஸ்தலத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.