நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்ப கோறளைப்பற்று (வாழைச்சேனை)பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழர்களின் பூர்வீக காணிகள் பிரிக்கப்படுவதை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.

கோறளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளை ஓட்டமாவடி மத்தியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

வாகரை,வாழைச்சேனை,கிரான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முறைகேடான வகையில் எல்லைப்பிரிப்புகள் நடைபெற்றுவருவதாகவும் அவற்றினை உடன் நிறுத்த நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது பேரணியாக சென்ற பொதுமக்கள் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.