படுவான்கரை பாடசாலைகள் தரமுயர்த்தப்பட வேண்டும்.



(திலக்ஸ் ரெட்ணம்)
படுவான்கரையில் உள்ள பாடசாலைகள் தரமுயர்த்தப்படுவதுடன் சிறந்த கல்வியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

படுவான்கரை பிரதேசம் போரினால் பாதிக்கப்பட்டமையினால் இப்பகுதியில் உள்ள பாடசாலைகள் அபிவிருத்தி குறைவாக இடம்பெற்றது. தற்போது இந்த நல்லாட்சியிலும் இப்பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தியை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.  இப்பாடசாலைகளில் சிறந்த கல்வி உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் கல்வி கற்பதுக்கு மாணவர்கள் இங்கிருந்து  நகர்புற பாடசாலைகளை தேர்ந்தெடுக்கும் தேவையிருக்காது. பிரத்தியேக வகுப்புகளுக்கு பெண் மாணவிகள் தனியாக செல்லும் போது பல அசாம்பாவிதங்கள் நடைபெறவும் வாய்ப்புண்டு. 

யாழ் மாணவி வித்தியாவின் படுகொலை இதற்கு சிறந்த உதாரணமாகும். நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் பலவிதமான கஸ்டங்களையும் பல சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்  எனவும்
இந்த பாடசாலைகள் சிறந்த ஆளணி மற்றும் பௌதீக வளங்களை கொண்டு அமையுமாக இருந்தால் ஒவ்வொரு மாணவரும் சாதனையானாக எமது சமூகத்தில் அந்தஸ்தை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.