மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி நிகழ்வுகள்.


வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(25) இடம்பெற்ற கந்தசஷ்டி விரத இறுதி நாள் பொங்கல் நிகழ்வுகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம்முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம்> கார்த்திகை (நட்சத்திரம்) விரதம்> கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம்.வல்வினை நீக்கி வரும் வினை போக்கி செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும்> அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி

முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணாky; tpujkpUe;J பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு தியானத்திலும் பஜனை செய்வதிலும் கந்தரனுபூதி கந்தசஷ்டிகவசம் கந்தரலங்காரம் ஓதுவதிலும் கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.