கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையால் பிள்ளைகள் சிறுவர் காப்பகத்தில்


(லியோன்)

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக  பிள்ளைகளின் நலன் கருதி பிள்ளைகளை  சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்


மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  நாவக்குடா பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை மாத்தறை வலஸ் முள்ள பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் திருமணம் முடித்து  நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து  வந்த நிலையில்   இருவருக்கிடையில் ஏற்பட்ட  குடும்ப தகராறு காரணமாக  ஏற்பட்ட பிரச்சினையால் பிள்ளைகள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

தனது  மனைவி  பிள்ளைகளை கடினமான முறையில் தாக்குவதாக  119 என்ற அவசர பொலிஸ் இலக்கத்திற்கு கணவரால் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பெண்ணும் அவரது கணவரும்  கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகளின் பின் கணவன், மனைவி  இருவரையும்  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர் .

நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதை தொடர்ந்து இடம்பெற்ற  விசாரணைகளின் போது தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என கணவரால் தெரிவித்ததை தொடர்ந்து  குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய அறிக்கையினை சமர்பிக்குமாறும் அதுவரைக்கும் பிள்ளைகள் தந்தையின் பாதுகாப்பில் இருக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார் . 

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் (24)   செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது குறித்த பெண்ணின் வைத்திய அறிக்கை சமர்பிக்காத நிலையில் குறித்த தாய் தனது பிள்ளைகளை தன்னுடன் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ,.

இதற்கு மறுப்பு தெரிவித்தார் கணவன் பிள்ளைகளை தனக்கு ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .குறித்த இருவரையும் விசாரணை செய்த நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  பிள்ளைகளின் பாதுகாப்பு நலன்  கருதி பிள்ளைகளை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் .

இதனை  கேள்வியுற்ற தந்தை தனது பிள்ளைகளை சிறுவர் காப்பகத்திற்கு அனுப்ப  மறுப்பு தெரிவித்ததோடு , பிள்ளைகளும் தனது தந்தையை விட்டு சிறுவர் காப்பகத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்து  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற முன்றலில் கண்ணீர்மல்க தமது மறுப்பை   தெரிவித்தனர்

இந்நிலையில்  அவ்விடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்ட விசாரனையின்  பின் மீண்டும்  மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணைகளின் பின் மீண்டும் நான்கு பிள்ளைகளையும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் .