மண்முனை வடக்கு சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக மாணவர் களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

(லியோன்)

  சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக மாணவர்களுக்கிடையில் பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட்ட  கலாசார மற்றும் இலக்கிய  சித்திரப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு  பரிசளிப்பு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது 


சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சமூகத்திற்கு எடுத்துச் செல்லகூடிய ஆற்றல் மிக்க சிறுவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் சிறுவர் கழக மாணவர்களில்  குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களில் உள்ள பல்வேறு திறமைகள் கொண்ட  மாணவர்களது  இலக்கிய மற்றும் கலைத்திறமைகளை மேலும் ஊக்குவிக்கும் முகமாக இந்த போட்டிகள் பிரதேச செயலக மட்டத்தில்  நடத்தப்படுகின்றன .  

இதன்கீழ்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட்ட கலாசார மற்றும் இலக்கிய  சித்திரப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது .   

இதேவேளை 2016 ஆம் ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிகளில்  புகைத்தல் தினத்தை முன்னிட்டு  கூடுதலான நிதியினை சேகரித்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் , பிரதேச செயலக மட்டத்தில் கூடுதலான நிதியினை சேகரித்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு  நடைபெற்றது .

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதியாக மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பி குணரெட்னம், மண்முனை   வடக்கு   சமுர்த்தி  திணைக்கள முகாமைத்துவ  பணிப்பாளர்   திருமதி .  கிரிதராஜ்  நிர்மலா ,  மண்முனை வடக்கு  சமுர்த்தி   திணைக்கள  முகாமையாளர்  திருமதி. செல்வி வாமதேவன்  ,மண்முனை வடக்கு சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர்கள் ,  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் மண்முனை வடக்கு வலய சமுர்த்தி  பயனாளிகள் ,  சமுர்த்தி பயனாளிகளின் பாடசாலை செல்லும் மாணவர்கள் கலந்துகொண்டனர்    .