சவுக்கடி இரட்டைப்படுகொலைகள் -சடலங்கள் ஒரே குழியில் நல்லடக்கம்

மட்டக்களப்பு,ஏறாவூர் சவுக்கடியில் கடந்த 18 ஆம் திகதி தீபாவளி தினமன்று  படுகொலை செய்யப்பட்ட தாயும் மகனதும் பிரேதங்கள் கிராம மக்களின் கண்ணீருடன் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கடந்த தீபாவளி தினத்தன்று 27 வயதுடைய தாயான (பீ.மதுவந்தி) அவருடைய 11 வயதுடைய மகன் பீ.மதுசன் ஆகிய இருவரும் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

மிகவும் துன்பகரமான இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதடன் கிராமமே கண்ணிர் சிந்த இரண்டு உடல்களும் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த கொலை சம்பாவம்  தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதன்போது பலர் விசாரணை செய்யப்பட்ட நிலையில் ஐந்து பேர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இது தொடர்பில் தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிசாருடன் வாழைச்சேனை மற்றும் வாகரை பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தகது.