வெபர் கிண்ணம் இரண்டாம் நாள் போட்டிகள் சிறப்பாக ஆரம்பம்

மட்டக்களப்பு மைக்கெல்மென் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பெவர் ஞாபகார்த்த சுற்றுப்போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று மாலை நடைபெற்றது.

நேற்று மாலை வெபர் கிண்ண ஞாபகார்த்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ச்சியாக போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்றைய இரண்டாம் நாள் போட்டிகள் மைக்கெல்மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.பி.சுலோக்ஸன் தலைமையில் ஆரம்பான இரண்டாம் நாள் போட்டிகளுக்கு மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு 231வது படைத்தளத்தின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் எஸ்.பி.நிவுன்கெல,கதிர்இயக்கவியல் வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.டிலக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது காலி அணிக்கும் மட்டக்களப்பு நீல அணிக்கும் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு நீல அணி வெற்றிபெற்றுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வெபர் ஞாபகார்த்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்’ளது.