தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு  மண்ணுக்கும், கல்லூரிக்கும்  பெருமை சேர்த்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின்  மாணவி ரவி யோசித்தா தேசிய மட்டத்தில் நடைபெற்ற கராட்டி போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு புனித ஜோன்ஸ் கல்லூரியில்  ஒக்டோபர் மாதம் 03.04,05 ஆம் திகதிகளில் நடைபெற்ற 18 வயதுகுற்பட்ட பெண்கள் அணியினருக்கான  
தேசிய மட்டத்திலான  கராட்டி இறுதிப் போட்டியில்  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி  மாணவி ரவி யோசித்தா  பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கல பதக்கத்தினை பெற்றுள்ளார் 

மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கல பதக்கத்தினை பெற்ற மாணவி ரவி யோசித்தா மட்டு மண்ணுக்கும், கல்லூரிக்கும்  பெருமை சேர்த்துள்ளார் , இவரை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் . கா .அருமைராசா தலைமையில் இன்று கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி  வலய (உடற்கல்வி ) உதவி கல்விப் பணிப்பாளர் வி .லவக்குமார் , பயிற்றுவிப்பாளர்  கே .குகதாசன்   , கல்லூரி பிரதி அதிபர் இ .இலங்கேஸ்வரன், உபா அதிபர்களான என் சிவலிங்கேஸ்வரன் , திருமதி எஸ் ..பாலமுருகன் , பாடசாலை  ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர் .