சிறுவர் பாதுகாப்பு, முறைபாடுகள் ,ஆலோசனைகள் தெரிவிக்கும் பதாகை

(லியோன்)

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக அறிவுறுத்தும் அறிவித்தல் பதாகை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது .


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் , கிராம மட்ட  சிறுவர் கண்காணிப்பு அபிவிருத்தி குழு மற்றும்  புளு மூன் சிறுவர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எஸ்கோ நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைபாடுகள் மற்றும் ஆலோசனைகள் தெரிவிக்கும் அறிவித்தல் பதாகையினை மட்டக்களப்பு மத்திய வீதியில் (11) இன்று திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வி .தவராஜா , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் ஆகியோர் கலந்துகொண்டு அறிவித்தல் பதாகையினை திறந்து வைத்தனர் .


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்  உதயராஜ் , கிராம சேவை உத்தியோகத்தர் ஜெயந்திரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன் , கிராம மட்ட  சிறுவர் கண்காணிப்பு அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,  புளு மூன் சிறுவர் கழகம் உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள் , பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்