திராய்மடு - நாவலடி நாமகள் வித்தியால ஆசிரியர் தின நிகழ்வு

(லியோன்)

 மட்டக்களப்பு திராய்மடு - நாவலடி நாமகள் வித்தியாலயத்தின்  ஆசிரியர் தின   நிகழ்வு  மிக  சிறப்பாக  நடைபெற்றது .


மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு திராய்மடு - நாவலடி நாமகள் வித்தியாலயத்தின்  ஆசிரியர் தின   நிகழ்வுகள்  பாடசாலை   தரம் 11  மாணவர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலை அதிபர் .வி ,குணசீலன்    தலைமையில்  பாடசாலை பிரதான  மண்டபத்தில் (11) இன்று  நடைபெற்றது . 

ஆரம்ப  நிகழ்வாக மாணவர்களினால்  ஆசிரியர்களை  வரவேற்கும்  நிகழ்வு       நடைபெற்றது .

அதனை  தொடர்ந்து   மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர்  கீதம்             இசைக்கப்பட்டு ஆசிரியர்  தின நிகழ்வுகள் நடைபெற்றது .                                     
 இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் ,   ஆசிரியர்களுக்கான  கௌரவிப்பும் நடைபெற்றது  .

நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற  ஆசிரியர்களைகௌரவிக்கும் வகையில்  ஆசிரியர் தின   நிகழ்வுகள் நடைபெற்றது 

இந்நிகழ்வின் போது ஆறு  வருடங்களுக்கு பின்  2017 ஆம்  ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த இப்பாடசாலை றோயிஸ்ரன்  டி லிமா மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது    

இந்நிகழ்வில்    பாடசாலை  ஆசிரியர்கள்  , மாணவர்கள்  கலந்து சிறப்பித்தனர் .