மட்டக்களப்பு மாவட்ட வைத்திய நிபுணர்கள் தொடர்பில் மட்டக்களப்பானின் ஆதங்கம்

நன்றி -முகப்புநூல்
மற்றைய வைத்தியர்கள் வியந்து பயந்து நிற்கும் கஷ்டமாண ஆபரேசனை இலகுவாக செய்யும் திறன் படைத்த VOG..... மட்டக்களப்பில் கைராசியான VOG என்று பெயர் எடுத்தவர்.... நல்ல மனநிலை கொண்ட மனிதராக பலராலும் சொல்லப்படுபவர்.... இப்படியெல்லாம் மக்களால் நம்பப்படும் VOG அவர்களே......!

உங்கள் அவசர நிலையை கொஞ்சம் தளர்ததலாமே.... மற்றைய வைத்தியர்கள் 1...2.... மணித்தியாலம் எடுக்கும் ஆபரேசனை நீங்கள் 5...10... நிமிடத்தில் முடிக்கும் வல்லமை கொண்டவர் இதை கொஞ்சம் நிதானமாக அவதானமாக செய்யலாமே.... உங்களுக்கு வெற்றி தோல்வி எண்ணிக்கை ஆனால் உங்கள் ஒரு தோல்வி ஒரு பரம்பரைக்கே இழப்பு.... இதை அறிவீர்களா..?
எல்லோருக்கும் பணம் அவசியம்தான் ஆனால் அது மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று சொல்லுவார்கள் பணத்துக்காக நோயாளிகளை தங்கள் வலைக்குள் விழுத்தலாமா....?
மட்டக்களப்பில் பிரசித்திப்பெற்ற மூன்று நான்கு மகப்பேறு வைத்தியர்கள் உள்ளார்கள் ஆனால் ஒருத்தரை ஒருத்தருக்கு தொழில் ரீதியாக பிடிக்காது ஏதோ இனம்புரியாத ஒருவகை பகை உணர்வுடன் உங்கள் வாழ்க்கையை கொண்டு செல்கின்றீர்கள் இதனாலும் பாதிக்கப்படுவது மக்கள்தான் இது உங்களுக்கு புரியுமா...?
உங்கள் சிகிச்சை முறையில் எல்லாம் வெற்றி அடையும் அல்லது அடைய வேண்டும் என்று ஒரு கட்டாயமோ கட்டுப்பாடோ ஏன் சட்டமோ இல்லை.... ஆனால் உங்களால் தவறு இழைக்கப்படும் சந்தர்பங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உங்கள் தவறை ஒத்துக்கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்யலாமே..... அதை விடுத்து உங்கள் பணபலம் அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகார துஸ்பிரயோகங்களை மேற்கொண்டு தவறுக்கு மேல் தவறு செய்யலாமா....?
நீங்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் தனியார் வைத்திய சாலைகளில் அவசர சிகிச்சைப்புரிவு மற்றும் அவசர நோயாளர் காவு வண்டி என்பன உள்ளனவா என்று உறுதிப்படுத்த மாட்டீர்களா...? இனியாவது அவைகள் இல்லாத மருத்துவ மனைகளில் உங்கள் சத்திர சிகிச்சையை நடத்துவதில்லை என்று முடிவெடுத்து கொள்வீர்களா...?
இவ்வாறு நீங்கள் விட்ட தவறுகளையும், கேள்விகளையும், உங்களிடம் நாங்கள் எதை எதிர்பார்க்கின்றோம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்...... உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது தற்போது இறந்த அமரர் திருமதி லதாஶ்ரீ சிவகுமார் அவர்களின் இறப்பு பற்றிய மர்மமும் அவர்கள் குடும்பத்தாருக்கான நியாயமும் அஅதற்கான உங்களின் பரிகாரமும்.....
இன்னுமொரு உயிரை நாம் இங்கு இழக்க விரும்பவில்லை..... அதற்கான உங்கள் உத்தரவாதம் நீங்கள் இனிமேல் எடுக்கும் தீர்மானங்களில் அடங்கி இருக்கின்றது.

நன்றி -முகப்புநூல்