பெரிய புல்லுமலை செபமாலை அன்னையின் ஆலய திருவிழா திருப்பலி 29 ஆம் திகதி ஒப்புகொடுக்கப்படும்

(லியோன்)

 மட்டக்களப்பு  பெரிய புல்லுமலை  புதுமைமிகு  புனித செபமாலை அன்னை திருத்தலத்தின்  ஐப்பசி  திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளது


மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பெரிய புல்லுமலை  மறை கோட்டத்தின்   புனித செபமாலை அன்னையின் ஆலய  திருவிழா  எதிர் வரும் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  எதிர்வரும்  29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30  மணிக்கும்  நடைபெறவுள்ள திருவிழா திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ளது     

அன்னையின் ஆலய திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும்  27ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை 04.00  மணிக்கு  கொடியேற்ற நிகழ்வு நடைபெறும்

28 ஆம்  சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு செபமாலை  அன்னையின் திருச்சுருப பவனியும் தொடர்ந்து விசேட நற்கருணை ஆராதனையுடன் திருப்பலி இடம்பெறும் .

எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30  மணிக்கும் அருட்தந்தை சி வி .அன்னதாஸ் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலியை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் ஐப்பசி திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது