வாழ்வோசை பாடசாலை பழைய மாணவர்களுக்கான தொழில் பயிற்சி நெறி

(லியோன்)

மட்டக்களப்பு வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை பழைய மாணவர்களுக்கான  தொழில் பயிற்சி நெறி (17)  செவ்வாய்கிழமை   மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது


மட்டக்களப்பு  மாவட்டத்தில்  உள்ள  விசேட தேவையுடையவர்களுக்கு வேலைவாய்ப்பினை  பெற்றுக்கொடுக்கும் நோக்குடன்   மட்டக்களப்பு கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவன நிதி அனுசரணையில் மட்டக்களப்பு வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை இணைந்து தொழில்  பயிற்சி நெறியினை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர்  

விசேட தேவையுடையவர்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட  இந்த தொழில் பயிற்சி நெறியானது ஆறுமாத கால பயிற்சியாக வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான தொழில் தருனர் நிறுவனத்துடான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் நடைபெற்றது  ,  

இந்த தொழில் பயிற்சி நெறியில் கணணி ,புகைப்படம் ஆகியன பயிற்சிகளாக பயிற்றிவிக்கப்படுவதுடன் ,பயிற்சிகளை நெறியினை நிறைவு செய்தவர்களுக்கு தேசிய தொழில் தகமை சான்றிதல்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த தொழில் பயிற்சிக்காக  தெரிவு செய்யப்பட 22   விசேட தேவையுடைய வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை இளைஞர் ,யுவதிகள் கலந்துகொண்டனர்


இதன்  ஆரம்ப நிகழ்வில்  அதிதிகளாக  கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய இணைத் தலைவர் யோகேஸ்வரன் , கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின்  அம்பாறை மாவட்ட  நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் டி .சரவணபவன் , திருகோணமலை கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எஸ் .ஜேசு சகாயம் , மட்டக்களப்பு மாவட்ட கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டி .ஜெயகுமார் , கிறிஸ்தவ வாலிப சங்க உதவி தலைவர் பாக்கியராஜா , கிறிஸ்தவ வாலிப சங்க பொதுச் செயலாளர்  ஜே . ஜெகன் ஜீவராஜ்  ,தொழில் தருநர் வி ஆர் .மகேந்திரன் மற்றும்  கிறிஸ்தவ வாலிப சங்க உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்