குமாரபுரம் - புன்னச்சோலை ஆலையடி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

 (லியோன்)

மட்டக்களப்பு குமாரபுரம் புன்னச்சோலை ஆலையடி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்   நிகழ்வுகள் இன்று  இடம்பெற்றது
.

இன்று காலை விசேட யாக பூசைகளுடன் திவ்விய ஹோமம் பூசைகள்  நடைபெற்று  ஆலய  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் அதிகாலை  சுபவேளையில்  நடைபெற்றது

இதனை தொடர்ந்து ஆலய பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ பொ யோகராசா பூசகர் தலைமையில் விசேட  அபிசேகம் பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தி  நாகதம்பிரான்  அபிசேகம் செய்யப்பட்டதது .

இதனை தொடர்ந்து பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக   பிரதிஷ்ட பிரதம குரு சபரீசதாசன் சபரிமலை குருசுவாமி பிரம்ம ஸ்ரீ தாணு வாசுதேவவா சிவாச்சாரியார்  தலைமையில்  நடைபெற்றது .


இந்த கும்பாபிஷேக விசேட நிகழ்வுகளில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்