கல்லடி சத்திய சாயி இல்ல 25வது ஆண்டு நிறைவு விழா

(லியோன்)


மட்டக்களப்பு கல்லடி சத்திய சாயி இல்ல  25வது ஆண்டு நிறைவு விழா இன்று கல்லடியில் நடைபெற்றது .கல்லடி சர்வதேச ஸ்ரீ சத்திய சாயி இல்ல 25வது ஆண்டு நிறைவு விழா இல்ல தலைவர் ஸ்ரீ .வி .என் . கனேசானந்தன் தலைமையில்  இன்று கல்லடியில் நடைபெற்றது


இதன் ஆரம்ப நிகழ்வாக கல்லடி சர்வதேச ஸ்ரீ சத்திய சாயி இல்லத்தில் இருந்து  சுவாமியின் திருவுருவம் தாங்கிய ஊர்வலம் ஆரம்பமாகி புதிய கல்முனை வீதி வழியாக துளசி மண்டப வழியாக பழைய கல்முனை வீதியூடாக சமித்தியை அடைந்து.


இந்தனை தொடர்ந்து சர்வமத கொடியேற்றப்பட்டு பூஜைகளுடன் சாயி அஷ்டோத்திர சாயி பஜனையும் நடைபெற்றது .


இந்த விசேட நிகழ்வில் ஸ்ரீ சத்திய சாயி பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்