மாவட்ட சர்வமத பேரவையின் மாதாந்த செயலமர்வு

(லியோன்)

மாவட்ட சர்வமத பேரவையின்  மாதாந்த கூட்டத்தின்  செயலமர்வு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை சமாதான பேரவையினால்  ஒழுங்கமைக்கப்பட்ட  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான    சர்வமத பேரவையினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு செயலமர்வில் முரண்பாடுகளில் நிலை மாற்றத்தின் கொண்டு வருவதற்கான பல மட்டங்களிலும் பங்காளிகளாக செயற்படுவதற்கான முயற்சி  எனும் தலைப்பில்   செயலமர்வும் கலந்துரையாடலும்   தேசிய சமாதான பேரவையின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு  கூட்டுறவு சங்க மண்டபத்தில்  நடைபெற்றது . 

நடைபெற்ற கலந்துரையாடலின் போது உலக சமாதான தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையினால் முன்னெடுக்கப்படவுள்ள செயல்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .

இந்த கலந்துரையாடலில் பின் எதிர் வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பு ஆறையம்பதி  பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து  மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பொது விளையாட்டு மைதானம் வரை மாபெரும் சமாதன பேரணி ஒன்றை நடாத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
\

நடைபெற்ற செயலமர்வில் இலங்கை சமாதான பேரவையின்  செயற்குழுவின் இனைப்பாளர் முஹமட் கதில் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்