மட்டக்களப்பு- விளாவட்டவான் கவின் கலைக் கழகத்தின் 2017ம் ஆண்டிற்கான புதிய படைப்பு "நளமகாராசன்" தென்மோடி கூத்து சதங்கை அணிவிழா.








(சசி துறையூர் ) மட்டக்களப்பு- விளாவட்டவான் கவின் கலைக் கழகத்தின் 2017ம் ஆண்டிற்கான புதிய படைப்பு "நளமகாராசன்" தென்மோடி கூத்து சதங்கை அணிவிழா 10/09/2017 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

 விளாவட்டவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு பல்கழைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் சு .சந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.

புதிய படைப்பான  "நளமகாராசன்" கூத்தினை கடந்த சில மாதங்களாக பயின்று வந்த விளாவட்டவான் கவின் கலைக் கழகத்தின்  கலைஞர்கள் எதிர் வரும் 02/10/2017ம் திகதி  ஆரம்பமாகவுள்ள  விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய உற்சவத்தின்
3ம் நாள் திருவிழாவின் போது அரங்கேற்றம் செய்யவுள்ளனர்.

இக்கூத்தின் விசேட அம்சமாக இளைஞர்கள் பலர் கூத்தர்களாக பரிணமித்துள்ளனர். இது எதிர் காலத்தில் தமிழர்களின் பாரம்பரியமான கலைவடிவமான கூத்துக்கலை மென்மேலும் வளர்ச்சிபெறும் என்பதனை கட்டியம் கூறுகிறது.

இக் கூத்து கலைஞர்கள் விபரம்.

அண்னாவியார் மா.ஞானசெல்வம்
உதவி அண்னாவியார்
அ.ரகு
கொப்பி ஆசிரியர்
வ.திலீபன்
தலைமை
ப.சண்முகமூர்த்தி
(தலைவர்-கவின் கலைக் கழகம்)

கூத்தர்கள் விபரம்.

1.கட்டியன்-செல்வன் க.கேதீஸ்
2.வீமராசன்-திரு சி.தங்கவேல்
3.கோகிலாதேவி- திரு கை.புஸ்பராசா
4.மந்திரி செல்வன் ம.ருசாந்தன்
5.தமயந்தி -செல்வன் ந.யுகன்
6.தோளி1 -செல்வன் அ.அணேஜன்
7.தோளி2 - செல்வன் ந.மிதுர்சன்
8.நளன் - திரு மு.மோகனராசா
9.அன்னப்பட்சி  - திரு மு.சந்திரசேகரம்
10.இந்திரன் - திரு அ.அம்பலவானன்
11.நாரதர்- செல்வன் சி.லூகன்
12.பறையன்- திரு ஏ.வெற்றிவேல்
13.சனீஸ்வரர்- செல்வன் த.சுமன்
14.புட்கரன் - செல்வன் இ .அபிலாஷ்
15.வேடன் - செல்வன் த.ரூபன்
16.ரிதுபண்ணன் - செல்வன் சி. ருசியந்தன்
17.பாகசாதனன்- திரு மு.சந்திரசேகரம்