சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏழுதிய வேட்கை நூல் வெளியீட்டு விழா

 (லியோன்)


முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏழுதிய வேட்கை நூல் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன்  ஏழுதிய வேட்கை சிறைப் பயணக் குறிப்புகள் எனும் நூல் வெளியீட்டு  இன்று பிற்பகல் மட்டக்களப்பு செல்வநாயகம்  மண்டபத்தில் நடைபெற்றது

கடந்த இரு வருடங்களாக ஒரு அரசியல் கைதியாக தடுப்புக்காவலில் இருக்கும் சந்திரகாந்தன் தனது நேரத்தை செவ்வனே பயன்படுத்தி மட்டக்களப்பு சிறையிலிருந்து   திருகோணமலை மாகாணசபை அமர்வுகளுக்கு அழைத்துச் செலப்படுகின்ற வேளைகளில் அவர் மனக்கண் முன்னே விரிகின்ற வரலாற்றின் பக்கங்களை ஒரு வாய்மொழி வரலாறு கூறும் பாணியில் அவர் மீட்ட விடயங்களை நூல் வடிவில் எழுதியுள்ளார் .

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்  பிரதி தலைவர் கே .யோகவேல் தலைமையில் நடைபெற்றது


இந்நிகழ்வில் அதிதியாக  ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி , சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெற்றோர் ,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்  செயலாளர் பூ .பிரசாந்தன் ,கட்சி உறுப்பினர்கள் ,கட்சி  ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்


 .