தும்பங்கேணி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கி வைப்பு.


(மண்டூர் நிருபர்)     கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் தும்பங்கேணி இ.வி.தி சிவசக்தி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு உணவு மற்றும் பொருட்கள் கடந்த (3) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கொள்கை திட்டமிடல் அமைச்சின் தேசிய மனிதவளப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் சபையின் பொருளாளர் த.திருநாவுக்கரசு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.