ஆரையம்பதியில் இளைஞர்களுக்கான மாபெரும் தொழிற்சந்தை .


(சசி துறையூர் ) ஆரையம்பதியில் இளைஞர்களுக்கான மாபெரும்  தொழிற்சந்தை .

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, உயர்கல்வி, மற்றும் தொழிற்பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளக்கூடிய மாபெரும் தொழிற்சந்தை எதிர் வரும் 23.09.2017 சனிக்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இவ் தொழிற்சந்தையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் கலந்து பயன்பெற முடியும்,  என மட்டக்களப்பு மாவட்ட தகவல் நிலைய உத்தியோகஷ்தர் ரி.மகேந்திரராஜா எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர்களின் தொழில் தேடலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த தொழிற் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முப்பத்தைந்துக்கு மேற்பட்ட தொழிற்பயிற்சி , தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறவனங்கள் இந்த தொழிற்சந்தையில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.