உணவகங்களின் சுகாதாரத்தினை பரீட்சிக்கும் நடவடிக்கைகள்
(மண்டூர் நிருபர்)போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட  உணவகங்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இன்று (09.08.2017) புதன் கிழமை  பரீட்சிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் சுகாதார அபிவிருத்தி திட்டத்தில் உணவகங்களை தரப்படுத்தும் திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேசசபை உத்தியோகஸ்தர்களும் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து குறித்த பிரதேசங்களிலுள்ள உணவங்களில் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.