நீதிபதி எம்.பி. “பிணையா விளக்க மறியலா” என்னும் நூல் வெளியீடு

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.மொஹைதீன் எழுதியுள்ள “பிணையா விளக்க மறியலா” என்னும் நூல் வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(13) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(13) மாலை 4.00மணியளவில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் இலங்கை சோசலிச குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நெஷாத் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஷடீன்,கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரெட்ன மாரசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இந்த “பிணையா விளக்க மறியலா” என்னும் நூல் அனைவருக்கும் பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.