இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கல்விக் கருத்தரங்கு.


(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை கோட்டத்திலுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னாயத்த கல்வி கருத்தரங்கு அண்மையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், ம.மே. வலயக்கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், கோட்டக்கல்விப்பணிப்பாளர் ந.தயாசீலன், அதிபர்கள், வளவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கு தொடர்ந்து நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.